Sunday, October 19, 2014

மீத கவிதை - 1

கவிதையும்
இயற்கைதான் ...
மௌனம்
இங்கு மொழி ...
புரிதலும் ரசனையும்
இங்கு அவசியம் !



Wednesday, September 3, 2014

என் பிரியமான ...................!

அன்பே ........!

இந்த பின்னிரவு 
கவிதை சொல்லுமா
உனக்கு என்னுள்
நீ எங்கு தொலைந்தாய் என்று ?!

அல்லது 
உன் கண்ணீர் வழிந்த 
கண்ணங்களில் என்
அன்பு முத்தங்கள்
அழுத்தி சொன்னதா
எனக்குள் நீ நடத்தும்
ராஜாங்கத்தை !

இது நொடிப்பொழுது
பிரிவுகளை மிகைப்படுத்தி
ஊடல்களில்
சலனமிடும் காலம்.

காதலின் வயது
காலனுக்கே
அரியாதது
காத்திருந்தாயா
இத்தனை காலம்
எனை காதலில் கொல்ல ?

என் அரவனைப்பின்
இதம் உனக்கு மிகவும்
பிடிக்கும் ...
எனக்கும் சுகமான ஒன்று...
மெல்ல சாகிறேன்
வீழ்வது உன் மடியில் தானே
என எனக்கு நானே சொல்லியபடி......

Monday, July 14, 2014

உன் புன்னகை

உன் ஒவ்வொரு
புன்னகை பூவும்
சொல்லும்
உன் இதயம் எனை
நினைத்து துடித்து
பூத்த பூக்கள் என்று....

Tuesday, April 1, 2014

ஊஞ்சல்














உள்நோக்கி செல்லும்
மூச்சு காற்றாய்  நம்மை
மேலே கொண்டுசெல்லும்,
பார்வையில் பூமி
சரிய தொடங்கும்
மறுநொடி கீழே வந்து
மேல்நோக்கி கொண்டு செல்லும்..
மீண்டும் கீழ் தள்ளி
விளையாட்டு தொடரும்.

வாழ்க்கை விதிகளில்
ஊஞ்சல் என்பது
விளையாட்டல்ல,
கட்டாயம் என புரிய வைக்கும்.

கூர்ந்து கவனித்தால் புரிவது
ஆட்டத்தில்  நாம் நம்புவது
நம்மை விட
சங்கிலியை தானென்று !!