Thursday, July 15, 2010

மேகங்களின் இடையே

மேகங்களை கலைத்து
சந்தோஷபட்டது காற்று 
விருப்பமான கனவு 
கலைந்தது போல் பாரம் 
தொலைந்த பொம்மை 
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது 
கலைந்த மேகங்களின் இடையே 
மிதந்து வந்த 
சில பறவை இறகுகளும்... 
முகத்தில் மோதிய 
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின 
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !

2 comments:

  1. உங்கள் கவிதை உயிரோட்டம் உள்ளது. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete