Thursday, July 1, 2010

வேண்டுவன வேண்டும்!

மீண்டும் பிறந்திட வேண்டும்
இந்த பூமிப்படுக்கையிலே
தாழாட்டு பாடிடவே இதே
தமிழ்த்தாயின் மடியும் வேண்டும்
 
எளிதில் தமிழ்ப்பற்றிடவே  விரைவில்
எனக்கு பாரதி விளங்கவேண்டும்
சுற்றும் உலகினிலே தமிழ்ப்படை
சூழவலம் வர வேண்டும்
 
தமிழர்க்கு இழைத்திடும் கொடுமைகளை
வேரினில் கொய்ய வேண்டும்
வேதனையுற்ற மக்களுக்கு துயர்துடைத்து
சாய்ந்திட தோள்தர வேண்டும்
 
வேல்தனை கொண்டு இனிபூசைகளில்லை
தமிழா நம்சோதனை தீர்ந்திடவே
முன்ணேற்ற பாதையில் குறுக்கிடும்
விஷஜந்துக்கள் கொல்ல வேண்டும்
 
வீட்டுக்குவீடு காவியம் பாடிட
இளங்கவிகள் கோடி வேண்டும்
இனி “இல்லை” என்ற சொல்லே
தமிழகாராதியில் இல்லாது போகவேண்டும்
                                                                           

1 comment:

  1. //எளிதில் தமிழ்ப்பற்றிடவே விரைவில்
    எனக்கு பாரதி விளங்கவேண்டும்
    சுற்றும் உலகினிலே தமிழ்ப்படை
    சூழவலம் வர வேண்டும்//

    கவிதை அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete