Sunday, June 6, 2010

யாரது ?

என் பயணத்தில்
பல நிறுத்தங்கள்
முகவரி தொலைத்த
பல முகங்கள்
முதுகில் சுமந்து
மீண்டும் பயணிக்கிறேன்
முகத்திரைகள் கிழியும்போது
அதிகம் வலி எனக்குதான்
மீண்டு பயணித்து மீண்டும்
சுமக்கிறேன் மீண்டும் .....
என் தேடல் தவறா?
இல்லை எங்கோ எனக்கான
காத்திருப்பு உண்டு .
வலிகளின் வழியே
பயணிக்கிறேன்
யார் என்னுள் இணையும்
நிஜம் என்று  என்று காண ?

4 comments:

  1. கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. வார்த்தைகளில் வலியினை தந்து விட்டு போகிற எழுத்துகள் உங்களுக்கு கை கூடி வருகிறது...வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே ..

    ReplyDelete
  4. நண்பரே! ஒவ்வொரு கவிதையையும் நேரம் கிடைக்கும்
    போது படிக்கிறேன்!
    ஆனால்,
    படித்தவரை ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு என்று
    சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete