Sunday, June 6, 2010

யாரது ?

என் பயணத்தில்
பல நிறுத்தங்கள்
முகவரி தொலைத்த
பல முகங்கள்
முதுகில் சுமந்து
மீண்டும் பயணிக்கிறேன்
முகத்திரைகள் கிழியும்போது
அதிகம் வலி எனக்குதான்
மீண்டு பயணித்து மீண்டும்
சுமக்கிறேன் மீண்டும் .....
என் தேடல் தவறா?
இல்லை எங்கோ எனக்கான
காத்திருப்பு உண்டு .
வலிகளின் வழியே
பயணிக்கிறேன்
யார் என்னுள் இணையும்
நிஜம் என்று  என்று காண ?