Tuesday, March 30, 2010

நிலாப்பாட்டி

குளிரில் நடுங்கி
சுற்றும் பூமி
வானம் முழுக்க
நட்சத்திர ஓட்டை
ஊசி நூல் கொண்டு
தைக்குமா நிலாப்பாட்டி?
?

Saturday, March 27, 2010

மீரா...

இந்த இரண்டெழுத்து
மந்திரம் உச்சரித்தாலே
கண்ணனின் காட்சியே!
இது தானே மீரா
உன் அன்பின் சாட்சியே!

ஆழ்ந்து மூடிய உன்
இமைகளுக்கு பின்னால்
நந்தவனத்து குழலோசை
நீ மீட்டிய தம்புரா
நரம்புகளில் உன்
காதலான பரிபாஷை

உன் காவியுடை சொன்னது
உன் காதலின் நிறம்
மாயக்கண்ணனுக்கே புரியும்
உன் அன்பின் தரம்
தத்தைகள் மயக்கி
வித்தைகள் செய்தவன்
தவித்து போனான் உன்
தரமுயர்ந்த பண்பினில்

பக்தியோடு காதலை
சொன்னாய்..
முக்தியோடு நீலவண்ணனய்
அடைந்தாய்.

Thursday, March 25, 2010

முகமூடி

சிரித்து ஏமாற்றும் சில
சிலந்தி வலையாய்
காத்திருக்கும் பல
வண்ண நிறங்களில்
ஆண்களும் பெண்களுமாய்
ஆளுக்கொன்றாய்
முகம் மூடி அலைகின்றன
எத்தனை கவனமாய்
இருந்தாலும் ஏமாற்றவே
முயல்கின்றன
சலித்து போன மனம்
சங்கடமாய் சொல்லும்
”வித்தைகாட்டும்
கோமாளி முகமூடியே மேல்!”

பெண்கள்

இயற்கை வர்ணனை
கவிதை காவியம்
ஓவியம் அழகு
சாதனை வேதனை
எங்கும் முதலிடம்
பெண்கள் தான்,
சட்ட இடஒதுக்கீடு
மட்டும் தான்
சமீபத்தில்

Tuesday, March 16, 2010

கவிதை வரைந்தேன்

கவிஞன் ஒரு ஓவியம்
வரைந்தான்
எண்ணங்களை வண்ணங்களாக்கி
வார்த்தைகளில் வர்னித்த
தாரிகையை தூரிகை
கொண்டு தீட்டினான்

ஒவியன் ஒரு கவிதை
வடித்தான்
வண்ணவண்ண எழுத்துகோர்த்து
காட்சிகளை காகித
வரிகளில் அடைத்தான்.

கவிதையும் ஓவியமும்
ஒன்றை ஒன்று
ரசித்து கொண்டாடின
மேகம் மழைநீரானதா?
மழைநீர் மேகமானதா??

Monday, March 8, 2010

உருமாற்றம்

அம்மாவின் அழுக்கு
முந்தானையில் இருந்த
கசங்கிய ரூபாய் நோட்டு
இப்போது
என் பள்ளிக்கூட
பையில் பளபளக்கும்
புது நோட்டு புத்தகமாய்.