Saturday, August 1, 2009

பழைய காதலி

பார்வைகளும், ஸ்பரிசங்களும்,
கடிதங்களும், கவிதைகளும்,
ஊடல்களும்,கூடல்களும்,
அவள் நினைவில் இருக்கிறதா?
தெரியவில்லை.

கனவிலும், கற்பனையிலும் பறந்தவள்
இன்று குடும்ப கூட்டில்
கலந்து போனாள்.

கனவனாய் காதலிப்பதை விட
பழைய காதலனாய் விரும்புகிறேன்
அதிகமாய்
என்று யாராவது சொல்லுங்களேன்
என் பழைய காதலியும்
இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!

1 comment:

  1. //கனவனாய் காதலிப்பதை விடபழைய காதலனாய் விரும்புகிறேன்அதிகமாய்என்று யாராவது சொல்லுங்களேன்என் பழைய காதலியும்இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!//

    :)

    கஷ்டம் கஷ்டம் !

    ReplyDelete